×

ரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் பாலாலயம்

மண்ணச்சநல்லூர், நவ.19: ரங்கம் ரெங்கநாதர் கோயிலின் உபகோயிலாக உள்ளது ரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில். இக்கோயில் சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தது. திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் கொடிய மிருகங்களும் உலவும் இடமாக இருந்தது. இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாயத்தை பாழ்படுத்தி மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த நிலையில் யானைகளின் தொல்லைகளில் இருந்து தன் எல்லை மக்களை பாதுகாக்க பெரியாழ்வாரின் சீடராக திகழ்ந்த நெடுமாறன் என்ற வல்லபதேவ பாண்டியன் லட்சுமி நரசிம்ம பெருமானை இங்கே எழுந்தருளச் செய்து கோயில் கட்டினார்.இப்பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை குறைந்து காட்டை திருத்தி நரசிம்மர் கோயில் அமைக்கப்பட்டதால் இந்த கோயிலுக்கு காட்டழகிய சிங்கர் கோயில் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி அனுக்ஞை வாஸடது ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக நேற்று பாலாலயம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் செயல்அலுவலர் ஜெயராமன், அறங்காவல்குழு தலைவர் வேணு சீனிவாசன், ரங்கம் கோயில் அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர், முரளி பட்டர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Palalam Palace ,Singer Temple ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ