நூலக வார விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டி போட்டி

திருச்சி, நவ.19: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் பாரம்பரிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. நூலகர் தலைமை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்கள் மறந்து வருகிறார்கள். சில கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் வீடியோ கேம்ஸ், செல்போன் மோகம் அதிகரித்துவிட்டது.பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்தும் உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே உள்ளது. பாரம்பரிய விளையாட்டினால் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டான பரமபதம், தாயம், பல்லாங்குழி விளையாட்டு புத்தூர் கிளை நூலகத்தில் நடத்தப்பட்டது. தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்றார்கள். ஜெயலட்சுமி நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: