×

புதுக்கோட்டை வட்டாரத்தில் நெல் சாகுபடி பயிற்சி

புதுக்கோட்டை, நவ.19: புதுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்து எம்குளவாய்பட்டி கிராமத்தில் பிள்ளையார்கோவில் வளாகத்தில் சுப்பையா, வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் திருப்பதி மற்றும் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி முன்னிலையில் நடைபெற்றது.வேளாண்மை இணை இயக்குநர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசு திட்டங்கள் மற்றும் குறிப்பாக பயிர் காப்பீடு திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் திருப்பதி முக்கிய இடுபொருட்களான விதை, தண்ணீர், உரம், பயிர் பாதுகாப்பு. தொழில்நுட்பம், கடன், எந்திரங்கள் திட்ட மானிய விபரங்கள் மற்றும் இயற்கை விவசாய பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கி பேசினார்.மத்திய அரசு திட்ட வேளாண்மை அலுவலர் பாண்டி விதையின் முக்கியத்துவம் மற்றும் எந்திர நடவு, நுண்சத்து நுண்ணுயிர் இடுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கோடைஉழவு, பி.எம்.கிசான், விவசாயிகள் பயிர் காப்பீடு, பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம், விவசாயிகள் ஊக்கத் தொகை, நுண்ணீர் பாசனம் மற்றும் உழவன் செயலி திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். நெல் பயிருக்கு மேலுரம் இடுதல் மற்றும் பூச்சி நோய் தாக்குதல் நேரில் வயலில் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்மை அலுவலர் கருப்பையா செயல்விளக்கம் செய்து காட்டினார். வேளாண் கருத்துக்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.  இணை வேளாண்மை இயக்குநர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கையேடு மற்றும் இடுபொருட்களை வழங்கினார்கள். முன்னோடி விவசாயிகளான கலியபெருமாள் மற்றும் குமரேசன் தங்களது அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்கள். வாpசை நடவு செயல்விளக்கம் பார்வையிடப்பட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி அனைவரையும் வரவேற்றார். கமலி உதவி வேளாண்மை அலுவலர் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கருப்பையா, கமலி, தேவி, பாண்டி மற்றும் அட்மா பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...