×

தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து இருசக்கர வாகன பேரணி

பொன்னமராவதி, நவ.19: பொன்னமராவதியில் சிஐடியூ சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து மோட்டார் பைக் பிரசாரம் நடைபெற்றது.சிஐடியூ மாவட்ட மாவட்ட துனை செயலாளர் ஏ.தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் சிஐடியூ மாவட்ட தலைவர் கே.முகமதலி ஜின்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அனைத்து போக்குவரத்து என்.பக்ருதீன், டி.ஒய்.எப்.ஐ குமார்,மாயழகு,சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எம்.அய்யாவு,பழக்கடை எஸ். கண்ணன், வி.எஸ். ஆர்.கனி, ஒய்யம்மாள், பட்டமரத்தான் மினிடோர் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் குமரேசன், விஷ்ணுகுமார்,மின் ஊழியர் மத்திய சங்க திருமயம் கோட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், எம்.ரவி, ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மணிமாறன், சரவணகுமார், சையது அப்பாஸ், கைலாசநாதன், கதலீஸ்வரன், சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மலையாண்டி, மணி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க பொன்னமராவதி பேரூராட்சி கிளை நிர்வாகிகள் சுப்பிரமணி, அய்யாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோட்டார் பைக் பேரணி காந்தி சிலையில் ஆரம்பித்து அண்ணாசாலை வழியாக பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Tags : rally ,
× RELATED வாக்காளர் விழிப்புணர்வு பேரணி