×

அகில இந்திய சிலம்ப போட்டிக்கு அறந்தாங்கி மாணவர்கள் தேர்வு

அறந்தாங்கி, நவ.19: டெல்லியில் நடக்க உள்ள அகில இந்திய சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அறந்தாங்கி மாணவ, மாணவியரை டி.எஸ்.பி கோகிலா பாராட்டினார். திருச்சி நேசனல் கல்லுhரியில் மாநில அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆசான் அறந்தாங்கியை சேர்ந்த கராத்தேகண்ணையன் தலைமையிலான மாணவ,மாணவியர் வெற்றி பெற்று இன்டர்நேஷனல் அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளனர். வருகிற 22,23,24 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள அறந்தாங்கி மாணவ, மாணவியரை அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் ஆசான் கராத்தேகண்ணையன், அறந்தை ரோட்டரி கிளப் நிர்வாகி குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : All India Silamba Competition ,
× RELATED அனைத்து பள்ளிகளிலும் மாணவர்...