×

பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப சாவு

புதுக்கோட்டை, நவ.19: ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ் மகன் தீபக்ராஜ் (24). இவர் தனது நண்பர் ஜெயவேல் உடன் ஆலங்குடிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை தீபக்ராஜ் ஓட்டியுள்ளார். அப்போது அரிமழம் விலக்குரோடு அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது இருசக்கர வாகன டயர் வழிவிட்டு இருவரும் கீழே விழுந்தனர் . அப்போது அரசு பேருந்தின் டயர் தீபக்ராஜ் தலையில் ஏறியது . இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி உயிரிழந்தார் . மேலும் படுகாயமடைந்த ஜெயவேல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ்...