×

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் பள்ளி விடுமுறையால் சுகாதார பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

புதுக்கோட்டை, நவ.19: புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை அடைத்து மழை காலங்களிலும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அனைத்து சிறுவர்களும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக அப்பகுதியில் வரத்து வாய்க்கால் மற்றும் சாக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு பணியாளர் பயன்படுத்தும், உபகரணங்களை கொண்டு அகற்றி அதனை நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் கொட்டி பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை அந்த வழியாக வந்த புதுக்கோட்டை ஆர்டிஓ தண்டாயுதபாணி பார்த்துவிட்டு வாகனத்திலிருந்து இறங்கி குழந்தைகளிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை எடுத்துக்கூறி பாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது, அதனால் விவசாயிகள் மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்களுக்கு சிறுவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார். பெரியார் நகர் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகளில் புதுக்கோட்டை காவல்துறையினரும் குழந்தைகளுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் நாங்களும் இருப்போம் என உறுதி ஏற்றுக் கொண்டனர்.

Tags : Pudukkottai Municipal ,area ,
× RELATED திருப்புவனம் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயப் பணி தீவிரம்