×

உள்ளாட்சி தேர்தல் பணியில் சுயேச்சைகள் சுறுசுறுப்பு

புதுக்கோட்டை, நவ.19: புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்ச்சைகள் அதிகம்பேர் களம் இருக்க முடிவு செய்து, அவர்கள் தேர்தல் பணியை பல பகுதிகளில் தொடங்கவிட்டனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி நிர்வாகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பல நேரங்களில் பல அரசியல் கட்சிகள் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வந்தனர். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அந்தெந்த மாவட்டங்களில் கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முக்கிய கட்சிகளை தாண்டியும் சுயேட்ச்சைகள் அதிகள் பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். சிலர் முடிவு செய்தது மட்டுமில்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு சுயேட்ச்சைகள் அதிகம் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தது 5 வாக்குகள் மட்டுமே இருப்பதால் வாக்காளர்களை எளிதில் சந்திப்பது, அனைத்து வாக்காளர்கள் எளிதில் பழக்கப்பட்டவர்கள் என்பதால் கட்சியின்றி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியாளர்கள் தற்போதே வீடு வீடாக சென்று திண்ணை பேச்சில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் கூறியதாவது: தேர்தல் என்றால் கட்சி வேட்பாளர்களை தாண்டியும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியில் இருப்பார்கள். சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தலில் கூட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். உள்ளாட்சி தேர்தலில் சுயேட்டை வேட்பாளர்கள் ஆதிகம் அதிக அளவில் இருக்கும். சில இடங்களில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்களை தோல்வியடைய செய்யும் வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் வலிமை பெற்று இருப்பார்கள். இதனால் சட்மன்ற, பாராளுமன்ற சுயேட்சை வேட்பாளர்களை போல் இவர்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. இதனால் சில இடங்களில் சுயேட்சைகளை சரிகட்ட அந்த பகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பணியாற்ற தொடங்கி விட்டனர். இதில் ஒரு சிலர் சமாதானம் அடைத்துள்ளனர். ஒரு சிலர் சமாதானம் அடையாமல் போட்டியிடுவது உறுதி என தெரிவித்து களத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் களவானி 2 படத்தில் கதாநாயகன் விமல் பணம் பெருவதற்காகவே சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார். அதுபோல் சில சுயேட்சைகள் பணம் பெருவதற்காக களத்தில் இருப்பதுபோல் காட்டியும் வருகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுக்க அரசியல்கட்சிகளின் வேட்பாளர்கள் பணம்கொடுக்கவும் தயாரிகி வருகின்றனர். இன்னும் அரசியல் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் பட்டியில் வரவில்லை. அந்த பட்டியில் வந்தவுடன் அதில் அதிர்த்தியாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுவார்கள். அப்போது சுயேட்சைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு