×

எளம்பலூர் சாலையில் கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கும் மின் கம்பிகள்

பெரம்பலூர், நவ. 19: எளம்பலூர் சாலையில் கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மின்கம்பிகளை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலையில் கிரீன் சிட்டி என்ற நகர் பகுதி உள்ளது. எளம்பலூர் உப்போடை முன்பு அமைந்துள்ள நகராட்சின் விரிவாக்க பகுதியான இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்வழி தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில மின் கம்பிகள் 6 அடி உயரத்துக்கு எக்கி குதித்தால் சிறுவர்கள் கூட தொட்டு விடும் அருகில் உள்ளது. இது மின் விநியோகம் செய்யப்படும் நேரத்தில் பேராபத்தை ஏற்படுத்தி காவு வாங்கும் அபாயம் உள்ளது. எனவே கிரீன் சிட்டி பகுதியில் மிகமிக தாழ்வாக செல்கிற மின் கம்பிகளை இழுத்து உயர்த்து ஆபத்தில்லா வழித்தடத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று எளம்பலூர் உப்போடை பகுதி மக்கள், கிரீன் சிட்டி மின் நுகர்வோர் பெரம்பலூர் மின்சார வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...