×

கிராமப்புற மக்களின் தேவைகள் தீர்க்க முடியாத நிலை ஏற்படும்

பெரம்பலூர், நவ.19: உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறவில்லையெனில் கிரா மப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, அவர்களது பிரச்னைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்படும் என பெரம்பலூரில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.பெரம்பலூரில் நடந்த தமி ழ்நாடு பட்டதாரிகள் கூட்ட மைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் உள்ளாட்சி தேர்தல் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்பதற் காக கட்சியை பலப்படுத்தி வருகிறோம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோ ரிமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்வு நடந்து வருகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள பாஜக தயார் நிலையில் உள்ளது.வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்த லை பொறுத்த வரை இன்னும் கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். அதிக இடங்களில் போட்டியிடுவோம். தூய்மையான ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம்.உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறவில் லையெனில் கிராமப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, அவர்களது பிரச்னைகளை தீர் க்க முடியாத நாதியற்ற நிலை ஏற்படும். உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கு செல்லுபடியாகாது. தனிநபரின் செல் வாக்குதான் உள்ளாட்சி தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா