×

43 பதக்கங்களை பெற்று அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பெரம்பலூர், நவ. 19: பெரம்பலூரில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் 43 பதக்கங்களை பெற்று பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். இந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூரில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 குறுவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் 16 தங்க பதக்கம், 6 வெள்ளி பதக்கம், ஒரு வெண்கலம் மற்றும் ஆண்கள் பிரிவில் 8 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 43 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.இதில் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு 16 மாணவிகள், 8 மாணவர்கள் என மொத்தம் 24 மாணவ, மாணவிகள் தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை கலைமகள், உதவி தலைமை ஆசிரியர் சுல்தான் முகைதீன் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ரவி ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags : Government School Students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட,...