×

வெற்றியூரில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி


அரியலூர், நவ. 19: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின்கீழ் கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி. வெற்றியூர் கிராமத்தில் நடந்தது. பயிற்சியை திருமானூர் வேளாண்மை உதவி இயக்குனர் லதா துவக்கி வைத்து கரும்பு சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களான நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் நோக்கங்கள் குறித்து கூறினார். பயிற்சியில் அரியலூர் வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி பங்கேற்று வேளாண்மை துறையின்கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், நவீன கரும்பு சாகுபடியில் சொட்டுநீர் பாசனத்தின் அவசியம், நாற்றாங்கால் அமைத்தல் குறித்து விரிவாக கூறினார்.

கரும்பில் உயரிய ரகங்கள், ஒற்றைப்பரு கொண்டு நாற்று தயாரித்தல் மற்றும் பராமரிப்பு குறித்து கோத்தாரி சாக்கரை ஆலை சார்பில் மண்டல மேலாளர் நாராயணசாமி விளக்கம் அளித்தார். கரும்பு சாகுபடி தொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நீர்வழி உர மேலாண்மை குறித்து வேளாண்மை அலுவலர் சாந்திவிளக்கம் அளித்தார். படைப்புழு மேலாண்மை மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி விளக்கி கூறினார்.உதவி வேளாண்மை அலுவலர்கள் மகேந்திரன், ஜெய்சங்கர், முருகன் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அன்பழகன், வசந்தி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது