×

நிபந்தனை ஜாமீனில் விடுதலை சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்ட முகிலன்

கரூர், நவ. 19: மதுரை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற சுற்றுச்சூழல் போராளி முகிலன் நேற்று கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்து இட்டுச் சென்றார். குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது கொடுத்த பாலியல் புகார் சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து முகிலனை கைது செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையும் கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து முகிலனுக்கு, கரூர் சிபிசிஐடி அலுவலத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த முகிலன், அலுவலகத்தின் உள்ளே சென்று கையெழுத்து போட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags : Mukhilan ,CBCID ,
× RELATED செங்கல்பட்டு அருகே பத்திரப்பதிவு...