×

கடவூர் தாலுகா தே.இடையபட்டி கிழக்கி்ல் மயான பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

கரூர், நவ. 19: கடவூர் தாலுகா தே.இடையபட்டி கிழக்கு கிராமத்தில் மயான பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.கடவூர் தாலுகா தே.இடையப்பட்டி கிழக்கு கிராமம் பொதுமக்கள் அளித்த மனு:எங்கள் கிராமம் தோன்றிய காலத்தில் இருந்தே பொது இடங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயான பாதையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதைக்கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். குளித்தலை டிஎஸ்பி பேச்சுவார்த்தையையடுத்து மறியல் கைவிடப்பட்டது. குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது.இதில் எடுத்த முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஆண்டாண்டு காலமாக யார் யார் எது எதற்கு உபயோகப்படுத்தி வந்தார்களோ அதன்படி உபயோகிக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கல்லடை ஊராட்சி பாரதிநகர், கீழவெளியூர் பொதுமக்கள்அளித்த மனு:

கீழவெளியூரில் பிரதான குடிநீர்குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தொட்டியில் நீரைசேகரித்து ஊராட்சி குடிநீரை எடுத்து டிராக்டரில் விற்பனை செய்து வருவதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று இலவச மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய கிணற்றில் இருந்து குடிநீரை விற்பனை செய்கின்றனர். ஊராட்சியிலோ ஒன்றியத்திலோ எந்த அனுமதியும் பெறவில்லை. தல ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டி மக்கள் சார்பில் அப்புச்சாமி அளித்த மனுவில், வெள்ளியணை ஊராட்சியில் உள்ள அனைத்து ஊர்களிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்தும் கொசுமருந்து அடிக்கப்படவில்லை. பொதுமக்கள் பள்ளிக்குழந்தைகள் காய்ச்சல் காரணமாக சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது