சுவாமிமலை முருகன் கோயிலுக்கு நெசவாளர்கள் காவடி எடுத்து வழிபாடு

கும்பகோணம், நவ. 19: கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலுக்கு திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த நெசவாளர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை மாத சோமவாரம் (திங்கள்தோறும்) சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு பால்குடம், காவடி எடுத்து சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி கார்த்திகை முதல் சோமவார தினமான நேற்று திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், பால்காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்தவாறு பாதயாத்திரையாக சுவாமிமலை சுவாமிநாத கோயிலுக்கு சென்றனர். கும்பகோணம் நகரின் வழியாக சுவாமிமலைக்கு 200க்கும் மேற்பட்டோர் காவடிகளை எடுத்தும், 400 பேர் பாதயாத்திரையாகவும் சென்றனர். பின்னர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர்.

Related Stories: