×

பூண்டி கலைச்செல்வன் 12ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி

திருவாரூர். நவ.19: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மறைந்த மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் 12ம் ஆண்டு  நினைவுதின அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்த பூண்டி கலைச்செல்வன் கடந்த 2007ம் ஆண்டு மறைந்ததையடுத்து அவரது நினைவு தின அமைதிப் பேரணியானது மாவட்ட திமுக சார்பில் ஆண்டுதோறும் கொரடாச்சேரியில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் 12ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற அமைதி பேரணியை வெட்டாற்று பாலத்திலிருந்து கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் தொடங்கிவைத்தார். பேரணியானது கடைத்தெரு, ரயில் நிலையம் வழியாக பூண்டி கலைச்செல்வன் வீட்டினை அடைந்து முடிவுற்றது. இதில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன், தஞ்சை மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், துரை சந்திரசேகரன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்எல்ஏ அசோகன்,ஒன்றிய செயலாளர்கள் தேவா,பாலச்சந்தர், கலியபெருமாள், பிரகாஷ், மனோகரன் மற்றும் நகர செயலாளர் பிரகாஷ் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவரும் பூண்டி கலைச்செல்வன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியினை கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தார். ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியினை எம்எல்ஏ அன்பழகன் துவங்கி வைத்தார். மரக்கன்று நடும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மதிவாணன் தொடங்கி வைத்தார்.

Tags : Anniversary Peace Rally ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு,...