×

ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட செயல்விளக்கம்

நீடாமங்கலம்,நவ.19: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட செயல்விளக்கம நடைபெற்றது. இதில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் அமைப்பது குறித்த பயிற்சி நிலைய கால்நடையியல் விஞ்ஞானி சரவணன் தலைமையில் நடந்தது.அப்போது அவர் கூறுகையில் பயிர்கள்,கால்நடைகள், மீன்வளர்ப்பு ,பறவைகள் மற்றும் வனவியல் போன்றவை ஒங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் அங்கங்களாகும்.வெள்ளாடு ,செம்மறியாடு, பசு,எருமை,ஆடு,கோழிபோன்ற கால்நடைகளின் பகுதிகளாகும்.கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்புக்கு தேவையான வைக்கோல் மற்றும் தீவன புல் பயிர் சாகுபடிகளில் இருந்து பெறப்படுகிறது.ஒரு ஏக்கர் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் 2 கறவை மாடு மற்றும் 4 ஆடுகள் போதுமானதாக இருக்கும். இவற்றின் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை மண்புழு உர உற்பத்திக்கு ஆதாரமாக விளங்குகிறது. என்றார்.

உழவியல்துறை விஞ்ஞானி ரஜேஷ்குமார் கூறுகையில், நன்செய் நிலத்திற்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் பயிர்சாகுபடி ,வரப்பு பயிர் சாகுபடி, நாட்டுக்கோழி வளர்ப்பு,கறவைமாடு வளர்ப்பு,ஆடு,மண்புழு உரம் தயாரிப்பு வீட்டுத் தோட்டம், தீவனப்பயிர்,தேனீக்கள் மற்றும் பழ மரங்கள் போன்ற முக்கிய அங்கங்களாக பின்பற்றப்படுகிறது என்றார்.வீட்டுத்தோட்டத்தில் கீரை,பாகற்காய்,புடலங்காய், வாழை,முருங்கை,முள்ளங்கி,பப்பாளி போன்ற காய்கறி மற்றும் பழப்பயிர்களை மீன்குளத்தின் கரைகளில் பயிர் செய்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம் என்றனர்.பயிற்சியில் தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குனர் ,பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர்,பாபநாசம் வட்டார பகுதிகளை சேர்ந்த 100 ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட விவசாயிகள் மற்றும் திருச்சி,தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு செயல்விளக்கம் பெற்றனர்.

Tags :
× RELATED அமைச்சர் காமராஜ் பேட்டி...