×

திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

திருவாரூர், நவ. 19: திருவாரூர் அருகே புலிவலம் மற்றும் அடியக்கமங்கலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த நோயின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் என பல்வேறு பொது இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியானது அரசு மற்றும் சேவை அமைப்பினர் மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சார்பில் வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியானது நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வேண்டுகோள்படி மாவட்டம் முழுவதும் திமுகவினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புலிவலம் மற்றும் அடியக்க மங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து வரும் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று ஒன்றிய திமுக சார்பில் நிலவேம்பு குடிநீரை ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா வழங்கினார். இதில் ஓன்றிய அவைத் தலைவர் செல்வராஜ் மற்றும் பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தூத்துக்குடியில் இடிந்து விழுந்த...