×

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்

திருவாரூர், நவ.19: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் முத்துக்குமாரை வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த லிப்ட் நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடைப்பதால் மக்களின் நலன் கருதி அதனை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வரும் பேருந்துகள் மருத்துவ மனை வளாகத்திற்குள் அனுமதிக்கப் படாததால் அனைவருக்கும் சிரமம் ஏற்படும் நிலையில் பேருந்துகளை வளாகம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடி செல்லப்படுவதால் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பான வாகன நிறுத்தம் அமைத்து தரவேண்டும், மருத்துவமனையில் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றும் ஒரு சிலர் இரவு நேர பணியின் போது மது அருந்துவதால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவதால் அதனை தடுக்க தவறில் ஈடுபடும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனையின் பிணவறை அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தனியார் கம்பெனி நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags :
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை