×

துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர், நவ. 19: திருவாரூரில் அதிகாரிகளை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு எற்பட்டது.திருவாரூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் மகேஷ்வரன் (30). இவரை நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டுவதாக கூறி மகேஸ்வரன் நேற்று மண்ணெண்ணெய் குடித்து விட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியூ ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன், சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி உள்ளிட்ட ஏரளா மானோர் பங்கேற்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற் பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags : cleaning staff ,
× RELATED குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்