×

குண்டும், குழியுமான சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி

நீடாமங்கலம்,நவ.19: நீடாமங்கலம் அருகில் தேவங்குடி கடை வீதியிலிருந்து காவல் நிலையம் செல்லும் மோசமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது தேவங்குடி இந்த ஊராட்சியில் உள்ள பழந்தேவங்குடி,அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்,அங்கன்வாடி,அங்காடி,கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் காவல் நிலையம் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் லேசான மழை பெய்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இங்குள்ள வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு சாலையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கொசு தொல்லை உள்ளதால் நோய் பரவுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசித்–்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தேவங்குடி கடைவீதி வந்து மன்னார்குடி ,கொரடாச்சேரி,நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படிக்கும் கல்லூரி,பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அச்சத்தில் சேறும், சகதியுமாக உள்ள இந்த சாலையில் சென்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை நேரில் வந்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit road ,
× RELATED பெரும்பாலான கடைகள் அடைப்பு ஏரி,...