×

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தியாகிகள் நினைவுதின பேரணி

வேதாரண்யம், நவ.19: வேதாரண்யம் தாலுகா தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தியாகிகள் நினைவு தினப்பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தகட்டூரில் தலித் பெண்ணுக்கு ஆதரவான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி பஞ்சநதிக்குளம் சிவகுருநாதனின் 47ம் ஆண்டு நினைவு தினம், கூலி உயர்வுக்கான போராட்டத்தில் உயிரிழந்த வடிவேலின் 27ம் ஆண்டு நினைவு தினம் ஆகியவற்றையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.முன்னதாக, பஞ்சநதிக்குளம் மேற்கு பிள்ளையாரடி பகுதியில் இருந்து பேரணியாக வாய்மேட்டுக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள வடிவேல் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தகட்டூர் பகுதியில் உள்ள சிவகுருநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இரண்டு இடங்களிலும் நாகை தொகுதி எம்பி செல்வராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளை தலைவர் இளவரசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் சம்பந்தம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இடும்பையன், மாவட்ட துணை செயலாளர் நாராயணன், ஒன்றியச் செயலாளர் சிவகுரு பாண்டியன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் மேகலா, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags : Martyr ,Communist Party of India ,
× RELATED மாவட்டம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்