×

ஆய்வின் போது உதவி இயக்குனர் பிடித்த லாரிகள் மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை நவ. 19: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல் மேடு வழியாக மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நாகை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் செல்வி பிரியா கடந்த 10ம் தேதி மணல்மேடு பஞ்சாலை முன் நின்று அங்கு வந்த மூன்று லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் மூன்று லாரிகளில் மணல் இருந்தது தெரியவந்தது. அதில் அரசு ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுகுறித்து ஓட்டுனரிடம் விசாரிக்க முற்பட்ட போது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர்கள் ஓடிவிட்டனர். அதன் பிறகு மணல்மேடுகாவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்ய கேட்டுக் கொண்டார், ஆனால் மணல்மேடு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் . கடந்த மூன்று நாட்களாக கனிம வளத்துறை அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக நேற்று மாலை மணல்மேடு லாரிகளில் திருட்டு மணல்ஏற்றி வந்ததாக வழக்கு பதிவு செய்தனர். லாரியை ஓட்டி வந்த பெரிய குச்சி பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் தணிகாச்சலம் ம மற்றொரு லாரியை ஓட்டி வந்த வடநெடுகுளம் பாலகிருஷ்ணன் மகன் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3வது டிப்பர் லாரியின் ஓட்டுனர் பெயர் தெரியவில்லை. மூன்று லாரிகளில் தலா 2 யூனிட் மணலுடன் லாரிகளை மணல்மேடு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த லாரிகள் நாகை மாவட்டத்தை ஒட்டியுள்ள தஞ்சை மாவட்டம் நெய் குப்பையிலிருந்து மணல் ஏற்றி வந்ததாக விசாரணை தெரியவந்தது. தஞ்சை மாவட்டத்தில் மணல் குவாரி, சவுடு மணல் விற்பனை செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி நெய்க்குப்பை மற்றும் ஆடுதுறையில் இருந்து மணல் விற்கப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகள் நெய்க்குப்பை மற்றும் ஆடுதுறைக்கு சென்று பார்த்த போது உடனே அந்த இரண்டு குவாரி களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. தற்பொழுது மணல்மேடு வழியாக மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வதில்லை.

Tags : inspection ,assistant director ,
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்