×

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து தீட்சிதர்கள் வெளியேற வேண்டும்

சீர்காழி, நவ.19: சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து தீட்சிதர்கள் வெளியேற வேண்டும் திருமுருகன் காந்தி கூறினார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்துக்களுக்கு எதிராக பேசியதாகக் கூறி திருவெண்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வந்த திருமுருகன் காந்தி அளித்த பேட்டி:
சாராயக் கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதைப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரத்தில் பக்தர் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் தமிழர்களுக்கான கோயில். aதமிழர்கள் கட்டிய கோயில். தீட்சிதர்கள் வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dikshidars ,Chidambaram Natarajar ,
× RELATED புரெவி புயல் காரணமாக தொடர்ந்து...