×

சீர்காழியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி, நவ.19:சீர்காழியி–்ல் நேற்று மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலையும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. கல்லூரி பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றன. பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையோரம் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த மழை நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags : Rain peasants ,Sirkazhi ,
× RELATED மயிலாடுதுறை சீர்காழி அருகே 13 வயது...