×

மின்கம்பத்தை மூடி மறைத்த கொடிகளால் உயிர்பலி அபாயம்

கொள்ளிடம், நவ.19: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் மின்கம்பத்தை மூடியுள்ள செடிகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில், ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மின்கம்பங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பாலத்தின் துவக்கத்தில் உள்ள இரண்டு மின்கம்பங்களை செடிகள் அடர்ந்து வளர்ந்து மூடியுள்ளது. ஒரு மின்கம்பம் இருக்கும் இடம் தெரியாமல் போர்வை கொண்டு போர்த்தியது போல் உள்ளது. இந்த மின்கம்பங்களில் எப்போதும் மின்னோட்டம் இருந்து கொண்டேயிருப்பதால் கொடிகளின் வழியே மின்சாரம் பாய்ந்து அப்பகுதியே வருவோர்கள் மீது பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.தொடர்ந்து மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும், கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் நடைபாதையின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்களில் வளர்ந்து செடிகள் மீது மழை பெய்யும் போது ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மின்கம்பியிலிருந்து பாய்ந்து செல்லும் மின்சாரம் மிக எளிதில் பச்சைக்கொடியின் வழியே பாய்ந்து வந்து நடைபாதையில் செல்வோர்களின் மீது தாக்கும் ஆபத்து நிலவுகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் இருபுறங்களிலும் நீண்டு அடர்ந்து வளர்ந்துள்ள செடிகள் மற்றும் புதர்பகுதியும் நடந்து செல்வோர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

அப்பகுதியில் விஷப்பாம்புகள் போன்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. எனவே கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் ஆரம்ப நிலையில் இரண்டு பக்கங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகள் மற்றும் புதர்பகுதியும் நடந்து செல்வோர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அப்பகுதியில் விஷப்பாம்புகள் போன்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. எனவே கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் ஆரம்ப நிலையில் இரண்டு பக்கங்களிலும் அடர்ந்து வளார்ந்துள்ள செடிகொடிகளையும், புதர்களையும், மின்கம்பத்தை சூழ்ந்து மூடியுள்ள செடிகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...