×

வாகனத்திற்கு வாடகை பாக்கி கேட்டவருக்கு கொலை மிரட்டல்

நாகை,நவ.19:வாகனத்திற்கு வாடகை பாக்கி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த காஸ் டீலர் மீது குறைதீர் முகாமில் புகார் அளிக்கப்பட்டது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ இந்துமதி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் அளித்த மனு விபரம்: வாகனத்திற்கு வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றும் தனியார் கேஸ் டீலர் மீது புகார்:  நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கலையரசி இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நான் எனது கணவருடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் அதே பகுதியில் இயங்கி வரும் இண்டேன்கேஸ் டீலரிடம் கடந்த 2008 ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து எனது கணவர் தாட்கோ மூலம் மினிலோடு ஆட்டோ வாங்கினார். அந்த வாகனத்தை மாத வாடகைக்கு கடந்த 2011 ம் ஆண்டு முதல் அந்த கேஸ் டீலரிடம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டார்.

தொடர்ந்து 7 மாதங்கள் மட்டுமே மாத வாடகை வந்தது. அதன் பின்னர் இன்று வரை வாடகை கொடுக்காமல் அந்த டீலர் ஏமாற்றி வருகிறது. மேலும் வாடகை மற்றும் எங்களது வாகனத்தை கேட்டுசென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். இதனால் எனது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் வீட்டிலேயே இருப்பதால் எங்களது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் வாடி வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.பயிர் காப்பீடு கேட்டு மனு: திருக்குவளை அருகே வடுகூர் மற்றும் காடந்தேத்தி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனுவில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் மேற்கண்ட இரண்டு வருவாய் கிராமங்களும் கடுமையாக பாதிப்படைந்தது.

இதனால் நாங்கள் வீடுகள், பொருள்கள், பயிர்கள் என்று எல்லாவற்றையும் இழந்து உயிர்மட்டும் மிஞ்சி வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரமான நெற்பயிர் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் எங்கள் கிராமத்திற்கு உரிய பயிர் காப்பீடு தொகை இன்றுவரை வழங்கப்படவில்லை. ஆனால் கடன்கள் பெற்று இந்த ஆண்டு பயிர் சாகுபடி செய்துள்ளோம். எனவே உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இலவச வீட்டு மனை கேட்டு மனு:  திருமருகல் அருகே கல்லு£ரிதிருவாசல் மேலதெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் மேற்கண்ட முகவரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரை வீட்டுமனை பட்டா வழங்ப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் இதுநாள் வரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.   

Tags : Murder ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...