×

219 வயல்களில் மண்மாதிரி ஆய்வு


ஓமலூர், நவ.19: ஓமலூர்  அருகேயுள்ள கருப்பனம்பட்டி கிராமத்தில், 219 வயல்களில் மண் மாதிரிகள் ஆய்வு  செய்யப்பட்டு  மண்வள அட்டை வழங்கப்பட்டது. முதல் கட்டமாக 40 ஹெக்டேரில்  100 சதவீத மானியத்தில் இடுபொருட்களும் வழங்கப்பட்டது.
ஓமலூர்  வட்டாரத்தில் மானாவரி விவசாய பணிகளை மேற்கொள்ள, வேளாண்மைத்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மண்வள அட்டைகளின்படி, உரங்கள்  பயன்பாடு தொடர்பாக, கருப்பணம்பட்டி கிராமம் முழுமாதிரி கிராமமாக தேர்வு  செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஓமலூர் வேளாண்மை உதவி இயக்குனர்  நீலாம்பாள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், கிராமத்தின் பல்வேறு  பகுதியிலுள்ள 219 வயல்களில் உள்ள மண்மாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர்.  அதனடிப்படையில் மண்வள அட்டை வழங்கினர். இதில், முதல் கட்டமாக 40  ஹெக்டேருக்கு ரசாயன உரம், உயிர் உரம், நுண்ணூட்டச்சத்து போன்ற இடுபொருட்கள்  100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மண் தரத்தை அறிந்து  விவசாயம் மேற்கொள்ள, விவசாயிகளிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சை, புஞ்சை நிலங்களில் தற்போது செய்யப்பட  வேண்டிய விவசாய பணிகள், விதைக்கப்பட வேண்டிய பயிர்கள், அவற்றை பராமரிப்பது  உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை