×

லேப் டெக்னீசியன் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு

சேலம், நவ.19: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மருத்துவப்  பணியாளர் தேர்வு வாரியத்தால், 1,432 லேப் டெக்னீசியன்  பணி காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கான  ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு துறையால் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான  குறைந்த பட்ச வயது வரம்பு 01.07.2019 அன்று எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி,  பிசி, பிசிஎம் பிரிவினருக்கு 57வயதும் மற்றும் ஒசி பிரிவினருக்கு 30 வயது  இருக்க வேண்டும். பணிக்கான கல்வித்தகுதி  12ம் வகுப்புடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஒரு  வருடம் மெடிக்கல் லேப் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்.  மேற்கண்ட கல்வித்தகுதிடைய மனுதாரர்கள், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள்  மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது பதிவினை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது