×

சேந்தமங்கலம் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை சரிவு

சேந்தமங்கலம், நவ.19: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், கொல்லிமலை, திருமலைப்பட்டி, புதுச்சத்திரம், செல்லியாயிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை வியாபாரிகள் வாங்கி சென்று, ஆத்தூர், ராசிபுரம், செல்லப்பம்பட்டி, நாமகிரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர். சேகோ பேக்டரிகளில் மரவள்ளி கிழங்கில் உள்ள ஸ்டார்ச் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.  கடந்த வாரம் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், மரவள்ளி கிழங்கு டன் ₹9,500 வரை விற்பனையானது. தற்போது டன்னுக்கு ₹1500 வரை விலை வீழ்ச்சியடைந்து ₹8 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது. சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளிகிழங்கு கடந்த வாரம் டன் ₹12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டன்னுக்கு ₹2 ஆயிரம் விலை சரிந்து ₹10 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. தொடர் மழை காரணமாக மரவள்ளி கிழங்கு விளைச்சல் மற்றும் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Senthamangalam ,region ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை