×

பேட்டராயசுவாமி கோயில் பூட்டை உடைத்த மர்மநபர்

தேன்கனிக்கோட்டை, நவ.19:  தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோயில் கதவை உடைக்க முயன்ற மர்ம நபரை, பொது மக்கள் பிடிக்க முயன்றதால் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கற்களால் எதையோ உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் கோயில் கதவின் பூட்டை கற்களால் உடைத்துக்கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த நபரை பிடிக்க சென்ற போது, கற்களால் தாக்க தொடங்கினார். இதையடுத்து, தான் வந்த டூவீலரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார். அதே போல், அருகில் உள்ள கங்கம்மா கோயில் கதவையும் கற்களால் உடைக்க அந்த நபர் முயற்சி செய்துள்ளார். இரவு நேரத்தில் இது போல் தொடர்ந்து கோயில் கதவுகளை கற்களால் உடைக்க முயலும் அந்த நபர், மனநிலை பாதித்தவர் போல் உள்ளதாகவும், அவரை பிடிக்க சென்றால் கற்களை வீசி தாக்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இரவு நேரங்களில்  கோயில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Batmanaraswami ,
× RELATED பெத்தநாயக்கன் பாளையம் மாரியம்மன்...