×

காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு கொடியேற்று விழா

தர்மபுரி, நவ.19: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், கால பைரவ ஜெயந்தியை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு (காலபைரவர் ஜெயந்தி) பெருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று கொடியேற்று விழா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையொட்டி இன்று (19ம் தேதி) கால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமியாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ராஜ அலங்காரம் நடக்கிறது. 64 வகையான அபிஷேகமும், 18 குருக்கள் கொண்டு ஒரு லட்சத்து 8 அர்ச்சனை நடக்கிறது. 28 ஆகம பூஜைகள், நான்கு வேத பாராயணம் சிறப்பு உபஜார பூஜைகள் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்கார யாகம், 64 பைரவர் யாகம் நடக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

Tags : Flag Day Ceremony ,
× RELATED கயத்தாரில் தமிழக ஆசிரியர் கூட்டணி கொடியேற்று விழா