×

வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி

சூளகிரி, நவ.19: சூளகிரி அருகே வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் வல்லரசு(26). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்கு தர்மபுரிக்கு சென்ற வல்லரசு, நேற்று அதிகாலை 3.30 மணியளில் மீண்டும் கம்பெனிக்கு டூவீலரில் திரும்பியுள்ளார். அப்போது, அதே கம்பெனியில் வேலை பார்க்கும் தனது நன்பர்களான வினோத்குமார், பிரேம்குமார் ஆகியோரை டூவீலரில் அழைத்து சென்றார். குருபராத்தபள்ளி அருகே வந்த போது, வல்லரசு முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக டூவீலர் லாரியின் பின்புறம் அதிவேகத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வல்லரசு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  வினோத்குமாரும், பிரேம்குமாரும் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.   இதுகுறித்து தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், வல்லரசின் சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமராஜர் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பாலு (29). சொந்த வேலைக்காக நேற்று முன்தினம் மாலை, ஓசூர் நோக்கி டூவீலரில் சென்றுள்ளார். சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மோதினார்.  இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் ஓசூர் தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான  நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : crash ,
× RELATED வாகன விபத்தில் டிரைவர் பலி