×

கடத்தூர் அருகே பழுதடைந்து நின்ற அரசு பஸ்

கடத்தூர், நவ.19: கடத்தூர் அருகே புதூர் பகதியில் அரசு பஸ் பழுதடைந்து நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து கேத்துரெட்டிப்பட்டிக்கு 27ம் எண் கொண்ட அரசு பஸ் நேற்று காலை, 70பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் கடத்தூர் அருகே புதூர் பகுதியில் வந்த போது, பஸ்சின் பிரேக் ஆக்சில் ஒயர் கட்டாகி, பஸ்சின் முன் பக்க டயர்கள் சுற்றாமல், சுமார் 10மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் முன் பக்க டயர் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்திற்குள்ளாகினர். இதையடுத்து பஸ் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் தர்மபுரி பணி மனையில் இருந்து, 2மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு, பஸ்சில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதனால் பயணிகள் சுமார் 4மணி ேநரம் அப்பகுதியில் காத்திருக்க ேவண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில பயணிகள், அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஏறி சென்றனர்.இது குறித்து பயணிகள் கூறுகையில், தர்மபுரியில் இருந்து கேத்துரெட்டிப்பட்டி வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களை தரமானதாக இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றனர்.

Tags : Kadathur ,
× RELATED பஸ் மோதி விவசாயி பலி