×

கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபையை சுற்றிய பெண்கள்

சிதம்பரம், நவ. 19: கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்சபையை பெண்கள் சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். கார்த்திகை முதல் சோமவாரமான நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏராளமான பெண்கள் பொற்சபையை வலம் வந்தனர். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சோமவாரமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து நடராஜர் கோயில் சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் சோமவாரம் விரதம் கடைபிடிப்பது வழக்கம். கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான நேற்று அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்
கணக்கான பெண்கள் நடராஜர் சன்னதியையும், கொடி மரத்தையும் வலம் வந்தனர். சிலர் சபையை சுற்றி அங்கபிரதட்சணம் செய்தனர். நேற்று காலை சிதம்பரம் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. பெண்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். இதேபோன்று கோயிலில் உள்ள ஆதிமூலநாதர் சன்னதியையும் பெண்கள் 108 முறை வலம் வந்தனர். கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோயிலில் குவிந்தனர்.

Tags : Women ,occasion ,Chidambaram Natarajar Temple Siddhasabha ,Karthik ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது