×

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் குழந்தைகள் தினவிழா

ரிஷிவந்தியம், நவ. 18: ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஞானசத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் ரிஷிவந்தியம் தமிழ் சங்கத் தலைவர் ராஜேந்திரன் குழந்தைகள் தின சிறப்புகளை விளக்கினார். ஆசிரியர்கள் மகேந்திரா, ரவிக்குமார், சமூக ஆர்வலர் நந்தகுமார், சத்துணவு சமையலர்கள் சடையன், சின்னப்பிள்ளை கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு ரிஷிவந்தியம் தமிழ் சங்கத்தலைவர் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கினார்.

 ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேரந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவில், தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் கிராம கல்விக்குழு தலைவர் கோவிந்தராஜ் பேசினார். இதில், ஆரம்ப சுகாதார பணியாளர் புவனேஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் மகாலட்சுமி, சமூக ஆர்வலர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், ஆனந்தன், கண்ணையன், குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பெரியகொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் பாஸ்கரன், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சங்க நீதி சோழன், விஜியா, பணி தல பொறுப்பாளர் வெங்கடேசன் மற்றும் மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.  

Tags : Children's Day Festival ,Rishivantiyam Union ,
× RELATED குழந்தைகள் தின விழா