×

மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்

பண்ருட்டி, நவ. 19: பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு பெண்கள் மேனிலை பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சட்டப்பணி குழு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி கலந்துகொண்டு பேசினார். விழாவையொட்டி பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்களை கண்டு அஞ்ச கூடாது. தைரியமாக எதிர்த்து போராட வேண்டும். தன்னம்பிக்கையை அதிகமாக வளர்த்துக்கொண்டு நன்கு பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நீதிபதி கற்பகவள்ளி அறிவுரை வழங்கினார். இதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தன்னம்பிக்கை இருந்தால் எதையும்...