உயர்மின் கோபுரங்களால் பாதிப்பு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

ரிஷிவந்தியம், நவ. 19:    விழுப்புரம் மாவட்டத்தில் அமைத்துள்ள உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சங்கராபுரம்- திருக்கோவிலூர் பிரதான சாலையில் உள்ள பகண்டை கூட்டு சாலையில் மறியல் செய்தனர். மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மறியலில் மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மாவட்டத் தலைவர் தாண்டவராயன், மாவட்ட பொருளாளர் ரகுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்டசெயலாளர் பழனி, விவசாய சங்க ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் சாமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் சிவகுமார், முருகன், விவசாய சங்க நிர்வாகிகள் நாகராஜ், சுப்பராயன், செந்தில், ஏழுமலை, உத்திரகுமார், உத்திரகோட்டி, பிரேம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறியலில் உயர் மின் கோபுரம் அதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மட்டுமே பதிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அடங்கியுள்ள 1885ஐ  நீக்கிவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். நிலத்தை இழக்கும் அனைத்து உழவர்களுக்கும் 2013ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின்படி நிலத்தின் மதிப்பை சந்தை விலையை நிர்ணயம் செய்ய செய்து நான்கு மடங்கு வழங்க வேண்டும்.  ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்சாரம் சென்று கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கோபுரம் அமைந்துள்ள இடத்திற்கும் கம்பி செல்லும் இடத்திற்கு மாத வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.

நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் கூட்டியக்கத்தோடு தமிழக அரசு நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினரை பகண்டை கூட்டு சாலை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பகண்டை கூட்டு சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories:

>