×

பண்ருட்டியில் விரைவில் ரேக்ளா ரேஸ்

பண்ருட்டி, நவ. 19: மதுரை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு, மியூசிக் சேர் போன்ற விளையாட்டு போட்டிகள் நடப்பதுண்டு. இதில் ரேக்ளா ரேஸ் வெகு சிறப்பாக நடைபெறும். வண்டியில் காங்கேயன் காளைகள் கட்டி வைத்து ஓட்டுவார்கள். இந்த விளையாட்டு போட்டிகள் காலங்காலமாக நடந்து வருகிறது. ஏராளமான இளைஞர்கள் போட்டியில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ரேக்ளா வண்டிகள் தயார் செய்து, காங்கேயன் காளைகள் வேகமாக ஓடுவதற்கான பயிற்சி அளிப்பார்கள். இந்த ரேக்ளா ரேஸ் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போலவே மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல் பண்ருட்டியில் முதன்முதலாக இந்த ஆண்டு ரேக்ளா வண்டி பந்தயம் நடத்த சமூக ஆர்வலர்கள் முடிவெடுத்து வண்டிகள் தயார் செய்து கடந்த ஒரு வாரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆறுக்கு மேற்பட்ட காங்கேயன் காளைகள் வரவழைத்து, முறையான பயிற்சி அளித்து வருகின்றனர். விரைவில் பண்ருட்டியில் பொங்கல் திருநாளையொட்டி ரேக்ளா ரேஸ் நடத்தப்படுவதாக தெரிகிறது.


Tags : Rakla Race ,Panruti ,
× RELATED ஆன்-லைனில் படிக்க செல்போன் வாங்கித்...