விழுப்புரம் மாவட்டத்தில் 41 பிடிஓக்கள் இடமாற்றம்

விழுப்புரம், நவ. 19:   விழுப்புரம் மாவட்டத்தில் 41 பிடிஓக்கள் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் சிவக்குமார் திருக்கோவிலூர் பிடிஓவாகவும், அங்கிருந்த செல்லதுரை கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளராகவும், கல்வராயன்மலை ரவி ரிஷிவந்தியத்திற்கும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலக டிஆர்டிஏ மணிவாசகம், ரிஷிவந்தியம் ரெகுலர் பிடிஓவாகவும், அங்கிருந்த வெங்கடசுப்ரமணியன் கல்வராயன்மலைக்கும், கள்ளக்குறிச்சி சுமதி உளுந்தூர்பேட்டைக்கும், அங்கிருந்த பன்னீர்செல்வம் உளுந்தூர்பேட்டை ரெகுலர்பிடிஓவாகவும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் டிஆர்டிஏ கண்ணன் திருநாவலூர் பிடிஓவாகவும், தியாகதுருகம் துரைசாமி சின்னசேலத்திற்கும், ரிஷிவந்தியம் சொக்கநாதன் ஆட்சியர் அலுவலக டிஆர்டிஏ கண்காணிப்பாளராகவும், வானூர் சம்மந்தம் மைலம் பிடிஓவாகவும், திருவெண்ணெய்நல்லூர் ராம்குமார் கண்டமங்கலத்திற்கும், அங்கிருந்த திருவேங்கடம் ஒலக்கூருக்கும், கோலியனூர் ெஜகதீசன் மைலத்திற்கும், மரக்காணம் சுரேஷ்குமார் விக்கிரவாண்டிக்கும், சின்னசேலம் வீரங்கன் மேல்மலையனூருக்கும் என மொத்தம் 41 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: