×

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டி

சேத்தியாத்தோப்பு, நவ.19:கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலியமலை கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி பழுதடைந்ததால் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலியமலை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 750க்கும் அதிகமான குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் பிரதான தெருவில் அமைக்கப்பட்டிருந்த மினி குடிநீர் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தெரு மக்கள் பலரும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மோட்டார் பழுதானதால் குடிநீர் வழங்காமலும் சீரமைக்கப்படாததாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வழங்கும் மினி குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடப்பதால் சிலர் போஸ்டர் ஒட்டும் இடமாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக கிராம பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மினி குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Drinking water tank ,
× RELATED அரசுக்கு எதிராக போஸ்டர் பிளக்ஸ் அடிக்கக் கூடாது