விழுப்புரம் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்

விழுப்புரம், நவ. 19: விழுப்புரம் ஆட்சியராக அண்ணாதுரை நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். மக்கள்குறைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆட்சியராக இருந்த சுப்ரமணியன் தமிழ்நாடுதேர்தல் ஆணைய செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரத்திற்கு நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகாலம் பணியாற்றி வந்த ஆட்சியர் சுப்ரமணியன் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் மாவட்ட மக்களிடமிருந்து பிரியா விடைபெற்றார். இதனைத்தொடர்ந்து விழுப்புரத்திற்கு நியமிக்கப்பட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், ஊரக

வளர்ச்சி திட்டஇயக்குநர் மகேந்திரன்  உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவின்படி பொறுப்பேற்றுக்கொண்டேன். விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம், கல்விமேம்பாடு, ஊரகவளர்ச்சிதுறை மற்றும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காகவும் என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு தமிழகஅரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.  மாவட்ட மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கல்வி மேம்பாடு, விவசாயத்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் இதனை மேம்படுத்தி தமிழகஅரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவேன். கரும்புவிவசாயிகள் நிலுவைதொகை விவரங்களை தெரிந்துவருவாய் வசூல்சட்டத்தின் கீழ் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் அண்ணாதுரை, குரூப்- 1 தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி, தஞ்சை ஆட்சியர் போன்ற பல்வேறு பணியிடங்களில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே சன்னசிநல்லூரைச் சேர்ந்த ஆட்சியர் அண்ணாதுரை கடந்த 1976ம் ஆண்டு பிறந்தவர். பிஇ, எம்பிஏ முடித்துள்ள இவர் கடந்த 1999ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியர் பயிற்சியை தூத்துக்குடியில் தனது பணியை தொடங்கினார். 2010ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராகவும், 2016 ஜூலை முதல் தஞ்சை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: