×

சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு

நெல்லிக்குப்பம், நவ. 19: நெல்லிக்குப்பம் சடக்பஜார் பகுதியில் அமைந்துள்ள அருள் தரும் ஐயப்பன் சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் சரண கோஷத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சபரிமலைக்கு யாத்திரையாக சென்று ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்ய உள்ள ஐயப்ப பக்தர்கள் நேற்று முன்தினம் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து பக்தியுடன் விரதத்தை கடைப்பிடிப்பதற்காக காவி உடை அணிந்து மாலை அணிவித்து கொண்டனர். குருசாமிகள் ராதா, சேகர், சிவகுரு ஆகியோர் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். பெரியவர்கள், சிறுவர்கள், வயது முதிர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்து விரதம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி கன்னி சாமிகளுக்கு விளக்கி கூறினர். கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் தை மாதம் 1ம் தேதி வரை 60 நாட்கள் மதியம் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியை முருகன் துவக்கி வைத்தார். இதேபோல் நெல்லிக்குப்பம் மெயின் ரோடு வரசித்தி விநாயகர் கோயில், குடிதாங்கிசாவடி விநாயகர் கோயில், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அதிகாலையில் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சரண கோஷத்துடன் மகாதீபாராதனை செய்யப்பட்டு ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Evening pilgrims ,Sabarimala ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு