இருதரப்பினர் மோதல் 6 பேர் அதிரடி கைது

ரிஷிவந்தியம், நவ. 19:  ரிஷிவந்தியம் அருகே மையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் மனைவி சகுந்தலா (37). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி அந்தோணியம்மாள் (40) என்பவருக்கும் விளை நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இது தொடர்பாக சகுந்தலா

அளித்த புகாரின் பேரில் அந்தோணியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் அந்தோணியம்மாள், வில்லியம்ஜோசப், அலேஷ்துரைப்பாண்டி,  அந்தோணிராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் அந்தோணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம் மகன்கள் சடையன், முருகன் ஆகிய இருவரையும் பகண்டை கூட்டு சாலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: