×

உளுந்தூர் ஏரியில் முட்புதர்கள் அகற்றம்

உளுந்தூர்பேட்டை, நவ. 19:
உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட உளுந்தூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. மழை காலங்களில் அதிக அளவு மழைநீர் தேக்கி வைக்கக்கூடிய இந்த ஏரியில் இருந்த உளுந்தாண்டார்கோயில், நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்த ஏரி நிரம்பியவுடன் தண்ணீர் செல்வது வழக்கம். இந்த ஏரியில் தற்போது முள்புதர்கள் அதிக அளவு உள்ளதால் இதனை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் இந்த முள்செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதே போல் இந்த உளுந்தூர் ஏரிக்கு மழைநீர் வரக்கூடிய நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள முள்புதர்கள் மற்றும் செடிகளையும் அகற்றிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Removal ,lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு