27ம் தேதி முதல்வர் வருகை கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழா பந்தல் கால் நடப்பட்டது

கள்ளக்குறிச்சி, நவ. 19: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவக்க விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் விதமாக துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பெருவங்கூர் செல்லும் சாலை பகுதியில் உள்ள மைதானத்தில் விழா நடைபெறுவதற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த பகுதியில் விழாமேடை அமைக்கும் பணி துவக்க விழா நிகழ்ச்சியானது நேற்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் கிராண்குராலா தலைமையில் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்து பந்தல்கால் நட்டு துவக்கி வைத்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்பி காமராஜ், முன்னாள் எம்எல்ஏ அழகுவேலுபாபு, தாசில்தார் ராஜசேகர், விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், டிஎஸ்பி ராமநாதன், கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, ராஜேந்திரன், நகர செயலாளர்கள் பாபு, ஷியாம்சுந்தர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வெற்றிவேல், முன்னாள் மாவட்ட பேரவை தலைவர் ஞானவேல், மாவட்ட நிர்வாகி சீனுவாசன், நகர நிர்வாகி நம்பி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: