×

சிவில் சப்ளை குடோனில் சுமை தூக்குவோருக்கு முழு உடல் பரிசோதனை

உத்தமபாளையம், நவ.19: உத்தமபாளையம் சிவில் சப்ளை குடோனில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
உத்தமபாளையத்தில் சிவில் சப்ளை குடோன் செயல்படுகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தேனிமண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் தேனி அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை மண்டல மேலாளர் சீதாராமன் தொடங்கி வைத்தார். இதில் இதயநோய், சர்க்கரை நோய், ரத்தப்பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. முழு அளவில் குடோன்களில் பணியாற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும், இதனை களைவது பற்றியும் டாக்டர்கள் ஆலோசனைகளை வழங்கினார். இதனையடுத்து உத்தமபாளையத்தில் கண் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மண்டலமேலாளர் கூறுகையில், `` தேனி மண்டல அளவில் அனைத்து சிவில் சப்ளை குடோன்களிலும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை நடக்கிறது. இதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டால் அனைத்து சிகிச்சைகளுக்கும் காப்பீடு திட்டத்தின் கீழ் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Tags : load lifters ,
× RELATED சுமை தூக்குவோர் தொடர் போராட்டம் ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல்