×

அல்லிநகரத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் விழா

தேனி, நவ. 19: வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி தேனி அல்லிநகரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரத்தின் 83 வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனி கங்கைகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வஉசி இளைஞர் சங்கம் சார்பில் தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் உமாபதி, முருகன், நடராஜன், கோபால்ராஜா, பச்சிராஜா, விஜயகுமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வஉசி உருவப்படத்திற்கு உறவின்முறையினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Commemoration Ceremony ,Allinagar ,
× RELATED தேனி அருகே கிணற்றில் குதித்து காதல்...