பாவூர்சத்திரம் அருகே மடத்தூரில் காட்சி பொருளாக மாறிய குடிநீர் தொட்டி

பாவூர்சத்திரம், நவ.19: மடத்தூரில் காட்சி பொருளாக மாறியுள்ள குடிநீர்த் தொட்டியை விரைவில் சீரமைக்கும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழப்பாவூர் ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்தூரில் சுப்பிரமணியாபுரம், வெண்ணியூர், காலனி தெரு, அம்மன் கோவில் தெரு, ராமசாமி கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகள் உள்ளன.  இங்கு மக்கள் நலனுக்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமின்விசை பம்புடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.  ஆனால், மின்விசை மோட்டார் பழுதாகியும் சீரமைக்கப்படாததால் குடிநீர்த் தொட்டிகள் காட்சிப் பொருளாக மாறிவிட்டதால் விநியோகமும் தடைபட்டுள்ளது. இதனால் அவதிப்படும் மக்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் பல முறை தெரிவித்தும் பலனில்லை.  எனவே, இனியாவது பழுதான மின்மோட்டாரை பழுது நீக்குவதோடு புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories:

>