×

நாளைய மின்தடை

ராஜபாளையம், நவ. 19: ராஜபாளையம் மின்கோட்டத்தில் உள்ள முடங்கியாறு துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (நவ.20) நடைபெற உள்ளது. இதையொட்டி அய்யனார்கோவில் பகுதி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமயாபுரம், சம்மந்தபுரம், சுரைக்காய்பட்டி, பழைய பாளையம், மாடசாமிகோவில் தெரு, ஆவரம்பட்டி, ரயில்வே பீடர் சாலை, பழைய பஸ்நிலையம், மதுரை சாலை, பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.20) காலை 8 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று;...